கொரோனாவுக்காக நாடு மக்களின் சிறப்பு நிதியான PMCARES கொண்டு 50,000 உயிர் காக்கும் கருவியான வென்டிலேட்டரை உள்நாட்டில் தயாரிக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுவரை தயாரிக்கப்பட்ட 2,923 வென்டிலேட்டர் கருவிகளில் 1,340 வென்டிலேட்டர் கருவிகள் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், பீகார், கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கடைசிகுள் 14,000 வென்டிலேட்டர் கருவிகள் பிற மாநிலத்துக்கும் மற்றும் யூனியன் பிரதேசத்துக்கும் கொடுக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், PMCARES நிதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 83 கோடி, மகாராஷ்டிராவுக்கு 181 கோடி, உத்திரப்பிரதேசதிற்கு 103 கோடி, குஜராத்திற்கு 66 கோடி, டெல்லிக்கு 55 கோடி, மேற்கு வங்களத்துக்கு 53 கோடி, பீகாருக்கு 51 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.