இந்தியாவில் 6ஜி சேவை எப்போது என்பது குறித்த தகவலை டிராய் அமைப்பின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் 5ஜி சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால், அதே நேரத்தில் விரைவில் தொடங்கப்படுதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் 6ஜி சேவை அடுத்த பத்தாண்டுகளில் நம்மால் தொடங்க முடியும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். அதேபோல் 5ஜி சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டால் 450 பில்லியன் பொருளாதாரத்திற்கு பங்காற்றும் என்றும் பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.