65 வயது மேயர் 16 வயது சிறுமியுடன் திருமணம்!

Filed under: உலகம் |

65 வயதான ஹிசாம் ஹூசைன் தெஹைனி என்பவர் பிரேசில் நாட்டில் பாரானா மாகாணத்தின் மேயராக இருக்கிறார். இவர் 16 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டில் பாரானா மாகாணத்தின் மேயர் ஹிசாம் ஹூசைன் தெஹைனி(65). இவர் ஏற்கனவே திருமணம் செய்த நிலையில், இவருக்கு மொத்தம் 16 குழந்தைகள் உள்ளனர். மேயர் ஹிசாம் ஹூசைன் தெஹைனி பள்ளி மாணவியான 16 வயது ரோட் காமர்கோ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர், கடந்தாண்டு நடைபெற்ற மிஸ் அரவுகாரியா போட்டியில் கலந்துகொண்டு 2வது இடம் பெற்றிருந்தார். பள்ளி மாணவியை மேயர் ஹிசாம் திருமணம் செய்துள்ளார். மேயர் பதவியிலிருந்து அவர் விலகியுள்ள்ளார். இத்திருமணத்திற்கு அடுத்த நாள் சிறுமியின் தாய் மரிலீன் ரோட் அரவுகாரிய நகராட்சியின் கலாச்சார செயலாளாராகப் பதவி உயர்வு பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த 2000ம் ஆண்டு மேயர் ஹிசாம் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கும்பலுடன் ஏற்பட்ட தொடர்பால கைது செய்யப்பட்டார். பின்னர், அவருக்கும் அக்குற்றச் சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.