குறிப்பிடத்தக்க சாதனையாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான (1,13,53,571) கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இது கடந்த 11-நாட்களில் மூன்றாவது முறையாகும். இன்று காலை 7 மணி நிலவரப்படி, இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 69.90 கோடியைக் (69,90,62,776) கடந்தது. 72,26,439 அமர்வுகள் மூலம் இது சாதிக்கப்பட்டது.
நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படும் வேகம் மற்றும் விரிவாக்கத்தை அதிகரிக்க மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 42,942 நோயாளிகள் கொவிட் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,22,24,937 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் குணமடைந்தோர் வீதம் 97.48%. மத்திய, மாநில அரசின் கூட்டு முயற்சிகளால், தினசரி கொவிட் பாதிப்பு, தொடர்ந்து 72 நாட்களாக 50,000க்கும் கீழ் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 31,222 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,92,864. இது மொத்த பாதிப்பில் 1.19 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 15,26,056 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா இதுவரை, 53.31 கோடி (53,31,89,348) பரிசோதனைகளைச் செய்துள்ளது. நாடு முழுவதும் கொவிட் பரிசோதனை திறன் அதிகரித்துள்ள நிலையில், வாராந்திர பாதிப்பு வீதம் 2.56 சதவீதமாக உள்ளது. இது கடந்த 74 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. தினசரி பாதிப்பு வீதம், கடந்த 8 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாகவும், தொடர்ந்து 91 நாட்களாக 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.