7 ஆண்டுகளுக்குப் பிறகு டீசல் விலை குறைகிறது: கச்சா எண்ணெய் விலை சரிவால் மத்திய அரசு முடிவு !

Filed under: இந்தியா,தமிழகம் |

23209529டீசல் விலையைக் குறைப்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. 7 ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக டீசல் விலை குறைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலர் மற்றும் அதற்கும் குறைவாக விற்பனையாகி வருகிறது. இதனால் டீசல் விலையைக் குறைப்பதன் மூலம் பணவீக் கத்தை ஓரளவு குறைக்க முடியும் என்று அரசு நம்புகிறது. மேலும் பருவமழை போதிய அளவு இல்லாததால் விலை வாசி உயர்வைக் கட்டுப்படுத் தும் விதமாகவும் டீசல் விலையைக் குறைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி தனது அடுத்த நிதிக் கொள்கையில் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டீசல் விலைக் குறைப்பு நடவடிக்கை, டீசல் கார் உபயோகிப் பாளர்களுக்கு பலனளிக்கும் என்பதோடு மட்டுமின்றி பொருளா தார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று அரசு உறுதியாக நம்புகிறது.

டீசலுக்கு அளிக்கும் மானி யத்தை படிப்படியாகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதன்படி கடந்த ஓராண்டாக, மாதந்தோறும் லிட்டருக்கு 50 காசுகள் வீதம் டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. கடந்த ஓராண்டாக உயர்த்தப்பட்டு வந்த விலையைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டீசல் விலை லிட்டருக்கு 50 காசு உயர்த்தப்பட்டது. 20 மாதங் களில் டீசல் விலை 19 முறை உயர்த் தப்பட்டுள்ளது. ஒரு லிட்டருக்கு ரூ.11.81 உயர்த்தப்பட்டுள்ளது.

டீசல் விலைக் குறைப்பு, கடனுக்கான வட்டி குறைப்பு நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சந்தை நிலவரத்துக்கேற்ப டீசல் விலையை நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதற்கான காலம் வந்துவிட்டதாக அரசு கருதுகிறது. ஏற்கெனவே மாதந்தோறும் லிட்டருக்கு 50 காசுகள் வீதம் டீசல் விலை உயர்த்தப்பட்டது. இதன் மூலம் மானியத்தை அரசு படிப்படியாகக் குறைத்துவந்தது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் விலை குறைவால் மானியம் இல்லாத நிலையை டீசல் எட்டியிருக்கும் என தெரிகிறது.

சர்வதேச சந்தையில் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது, டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ஸ்திரமடைந்து வருவது ஆகிய நடவடிக்கைகள் நீடிக்கும்பட்சத்தில் டீசல் விலை குறைக்கப்படலாம் என்று பொதுத் துறை எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பெட்ரோல் மீதான விலைக் கட்டுப்பாடு அகற்றப்பட்ட பிறகு சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை 3 முறை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் டீசல் விலை குறைக்கப் படவில்லை. இப்போது டீசல் விலைக் குறைப்பு குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. மேலும் பெட்ரோலை போல டீசல் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்கிவிடுவது குறித்தும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

சர்வதேச சந்தை விலை அடிப்படையில் பார்க்கும்போது டீசல் விலை லிட்டருக்கு 8 காசுகள் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் எவ்வளவு குறைப்பது என்பதை அரசு இன்னமும் நிர்ணயம் செய்யவில்லை.

சர்வதேச சந்தையில் திங்கள் கிழமை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 99.36 டாலராக (ரூ.5,995) இருந்தது. கடந்த 14 மாதங்களில் கச்சா எண்ணெய் இந்த அளவுக்கு விலை குறைந்தது இதுவே முதல் முறையாகும்.