தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு ஒரு லட்சத்து 21 ஆயிரம் விண்ணப்பித்துள்ளனர். இதில் 99 ஆயிரத்து 610 பேர் நீட் தேர்வை எழுதியுள்ளனர். 57 ஆயிரத்து 715 மாணவர்கள் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.
இதில் அரசு பள்ளியில் படித்த 738 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் மற்றும் அரசு உதவி பள்ளியில் படித்த 877 மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த 6,692 பேர் தேர்வு எழுதியதில் 1,615 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் நான்கு பேர் 500 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்துள்ளார்.
இதை அடுத்து, அரசுப் பள்ளிகள் அளவில் இந்திய அளவில் முதலிடத்தை தேனியை சேர்ந்த ஜீவித் குமார் பிடித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீஜன் மாநில அளவில் முதலிடமும் மற்றும் தேசிய அளவில் 8வது இடத்தையும் பிடித்துள்ளார்.