90ஸ் கிட்ஸ் சில்க் ஸ்மிதாவிற்கு அஞ்சலி!

Filed under: சினிமா |

இன்று நடிகை சில்க் ஸ்மிதாவின் 27வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 90ஸ் கிட்ஸ் இதற்காக சில்க் ஸ்மிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செய்துள்ளனர்.

பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா கடந்த 1996ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று அவரது 27வது நினைவு தினத்தை அவரது ரசிகர்கள் அனுசரித்து வருகின்றனர். இதனையடுத்து ஈரோடு மாவட்டத்தில் சில்க் ஸ்மிதாவின் ரசிகர்கள் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.