பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலைகள் தினசரி நிகழ்வுகளாகிவிடும் என எச்சரிக்கை செய்துள்ளார்.
இது குறித்து அவர் பேசம்போது, “தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த குரும்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்றவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இறந்த வெங்கடேஷையும் சேர்த்து தமிழ்நாட்டில் கடந்த 9 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்திருக்கிறது. எந்த சமூகக் கேடுகளையும் விட அதிக உயிர்ப்பலி வாங்கும் கேடாக ஆன்லைன் சூதாட்டம் உருவெடுத்துள்ளது!
ஆன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்யவில்லை என்றால், ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் தினசரி நிகழ்வுகளாகி விடும். அத்தகைய நிலை ஏற்படுவதை அரசு தடுக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய உடனடியாக அவசர சட்டத்தை பிறப்பிப்பதால், தற்கொலைகளை தடுக்க வேண்டும்!