சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் பேருந்து நடத்துனரை தாக்கியபோது வன்முறையில் இறங்கியுள்ளனர். இதையடுத்து இப்படி வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சென்னை கமிஷனர் எச்சரித்துள்ளார்.
கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் சென்று வர பேருந்து மற்றும் மின்சார ரயில்களையே நம்பி உள்ளனர். அதில் செல்லும் மாணவர்களுக்குள் “ரூட்டு தல” யார் என்பது குறித்து பிரச்சினை எழுவது மற்றும் பிற கல்லூரி மாணவர்களுடன் எழும் பிரச்சினைகள் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கி கொண்டிருந்த மாணவர்களை கண்டித்த நடத்துனரை மாணவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்துனரை தாக்கிய மூன்று மாணவர்களையும் கைது செய்தனர். மாணவர்களை கண்டித்துள்ள சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், “இனி மாணவர்கள் வன்முறையில் இறங்கினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என கூறியுள்ளார்.