அண்ணா பல்கலைக்கழகத்திலும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
சென்னை ஐஐடியில் முன்னதாக கொரோனா உறுதியான நிலையில் தற்போது அண்ணா பல்கலைகழகத்திலும் கொரோனா உறுதியாகியுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐஐடியில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் கொரோனா பாதிப்புகள் அங்கு குறைந்தது. தற்போது அண்ணா பல்கலைகழகத்தில் ஒரே நாளில் 6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இது மீண்டும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.