ஈராக்கில் புது விதமாக மூக்கில் ரத்தம் வரவழைக்கும் வகையில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வித்தியாசமான நோய்கள் பரவி மக்களை பீதியடைய வைக்கிறது. இந்நிலையில் ஈராக்கில் பரவ தொடங்கியுள்ள மர்ம காய்ச்சல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து தற்போதுதான் நாம் மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறோம். அவ்வபோது பல்வேறு நோய்கள் திடீரென பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. சமீபத்தில் அவ்வாறாக ஐரோப்பிய நாடுகளில் பரவத் தொடங்கியுள்ள குரங்கு அம்மை நோய் தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது.
தற்போது ஈராக்கில் புதிய வகை காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. இந்த காய்ச்சலுக்கு காங்கோ காய்ச்சல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் மூக்கில் ரத்தம் வடிவதாகவும், பாதிக்கப்படுபவர்களில் 5ல் ஒருவர் உயிரிழப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மக்களிடையே மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.