தற்போது தமிழக மக்கள் ஆவலுடன் காத்திருக்கும் விஷயம் நயனுக்கும், விக்கிக்கும் நடைபெறவிருக்கும் திருமணத்தைத்தான். இன்றைய நிலையில் ஹாட் டாப்பிக்கே அதுதான். அவர்களது திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இணையதளம் ஒன்றில் நயன்தாரா திருமணம் குறித்த அழைப்பிதழ் வீடியோ வெளியிட்டது. அந்த வீடியோவில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் நடக்கவுள்ளதாக அறிவுக்கப்பட்டு இருந்தது. இத்திருமணத்திற்கு நயன்தாரா மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திருமணத்தின் வீடியோ ஒளிபரப்பு உரிமையை முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்ததும் அதில் இந்த கல்யாண வீடியோ ஸ்ட்ரீம் ஆகும் என்றும் கூறப்படுகிறது.