வன்முறையை உண்டாகும் வகையில் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ததாக ஜாகிர் நாயக் டிவி சேனலுக்கு 2.75 கோடி அபராதம் விதிப்பு!

Filed under: உலகம் |

இங்கிலாந்தில் வன்முறையை ஏற்படுத்தும் அடிப்படையில் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ததாக இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்க்கு சொந்தமான டிவி சேனலுக்கு ருபாய் 2.75 கோடி அபராதம் விதிப்பு.

இங்கிலாந்தின் ஊடகங்களை கண்காணித்து வரும் அமைப்பான ஆப்காம்; மனக்கசப்பு மற்றும் வன்முறையை உண்டாக்கும் வகையில் பேச்சை ஒளிபரப்பிய அமைதி (Peace Tv) உருது மொழி இரண்டு லட்சம் பவுண்டும் மற்றும் அமைதி சேனலுக்கு ஒரு லட்சம்பவுண்டும் அபராதம் விதிக்க உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

இதனைப்பற்றி ஆப்காம் அறிக்கையில் கூறியது: அமைதி தொலைக்காட்சி உருது மற்றும் அமைதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சியில் மனக்கசப்பு,வன்முறை ஏற்படும் பேச்சை உள்ளடக்கதுடன் ஒளிபரப்பு செய்கிறது என விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குற்றமான செயல் என கூறப்படுகிறது.