வரும் நவம்பர் 26ம் தேதி புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உறுப்பினர்கள் அனைவரும் அமர்வதற்கான போதுமான வசதி இல்லை என்பதால் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தில் எம்பிக்கள், மற்றும் பார்வையாளர்களுக்கு நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், கட்டுமானப் பணிகள் வரும் அக்டோபர் மாத இறுதியில் முடிப்பதற்கு ஒப்பந்ததாரர்களுக்கு அவசகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்பணிகள் முடிவடைந்து, அரசியலைப்பு சட்ட தினமான நவம்பர் 26ம் தேதி முதல் புதிய பாராளுமன்றக் கட்டிடம் செயல்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது. ரூ.861.90 கோடியில் புதிய நாடாளுமன்றம் கட்டிட ஒப்பந்தத்தை டாடா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.