சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மெரினாவில் பொதுமக்கள் இனிமேல் குளிக்க அனுமதியில்லை என்று கூறப்பட்டிருந்தாலும் தடையை மீறி பலர் குளித்து வருகின்றனர். அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மெரினாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் குளிக்கக் கூடாது என்று காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த போதிலும் ஒவ்வொரு மாதமும் மெரினாவில் குளிப்பதால் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
இதையடுத்து தற்போது மெரினாவில் டிரோன் மூலம் கண்காணிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தடையை மீறி குளிப்பதை டிரோன் மூலம் கண்டுபிடித்து விட்டால் உடனே அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்று எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பார்கள்.