புழல் சிறையில் மேலும் 11 விசாரணை கைதிகள் கொரோனாவால் பாதிப்பு!

Filed under: சென்னை |

சென்னையில் உள்ள புழல் மத்திய சிறையில் மேலும் 11 விசாரணை கைதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்பே இரண்டு காவலர்கள், பெண் தூய்மைப் பணியாளர், உள்பட 36 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிறையில் கொலை வழக்கில் இருந்த ஒருவர் கொரோன வைரசால் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் காலமானார். பின்பு இவருடன் தொடர்பு இருந்தவர்களுக்கு வைரஸ் பரவி இருக்க வாய்ப்பு என்பதால் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 11 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.