சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் சென்னையில் தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே பிரதான போக்குவரத்து சாலையில் போக்குவரத்து நெரிசலில் பயணித்த கார் ஒன்று திடீரென தீப்பற்றியுள்ளது. கார் திடீரென தீப்பற்றியதை கண்ட பிற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சில நிமிடங்களில் கார் முன்பக்கம் முழுவதும் தீப்பற்றியுள்ளது. இதை அப்பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர் தங்கள் போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Related posts:
மீனவர்களின் மீன்பிடிப்பு முறையில் உள்ள மோதலைத் தவிர்க்க நடவடிக்கை - சீமான் கோரிக்கை !
சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்!
போலிச்சான்றிதழ் மூலம் மோசடியில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும்!
7 உணவு பதப்படுத்தல் திட்டங்களை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் !



