செஸ் ஒலிம்பியாட்டில் கலந்து கொள்ளும் வீரர்களுக்காக 2 ஆயிரம் சிம்கார்டுகள் 5ஜி இன்டர்நெட் வசதியுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிகிறது. இந்நிலையில் இப்போட்டிக்காக 5ஜி இன்டர்நெட் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ள வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வீரர்களுக்காக 2000 சிம்கார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 300 செஸ் வீரர்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருப்பதாகவும் இன்று மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் சென்னை வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வீரர்கள் தங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.