இந்தியாவில் கொரோனாவுக்கு மூக்கு வழியாக செலுத்தும் மருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் உட்பட தடுப்பூசிகளுக்கு அவசர கால அனுமதி வழங்கப்பட்டது. கடந்தாண்டு தொடங்கப்பட்ட இந்த தடுப்பூசி திட்டம் மூலமாக நாடு முழுவதும் 150 கோடி டோஸுக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போல் அல்லாமல் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மூக்கின் வழி மருந்தாக செலுத்தப்படும் இது தடுப்பூசி போலவே கொரோனாவுக்கு எதிராக திறனோடு செயல்படக் கூடியது என கூறப்பட்டுள்ளது. இந்த மருந்தை பயன்படுத்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டகம் அனுமதி கொடுத்துள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இம்மருந்து பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.