தமிழகத்தில் 5 ஆயிரம் கோடி முதலீடு செய்யவிருப்பதாக டாடா நிறுவனம் அறிவித்துள்ளது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.
இந்தியாவின் பல மாநிலங்களில் டாடா நிறுவனம் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் டாடா நிறுவனம் 5 ஆயிரம் கோடி முதலீடு செய்யவிருப்பதாக இன்று அறிவித்துள்ளது. ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் என்ற ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலையில் 5,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை அமையவிருப்பதாகவும் இந்த தொழிற்சாலை வந்தால் ஏராளமானவர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.