பிரீ பையர் விளையாட்டு குறித்து நீதிபதிகள் கருத்து

Filed under: இந்தியா,தமிழகம் |

வன்முறையைத் தூண்டும் விதமாக பிரீ பையர் விளையாட்டு இருப்பதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளான பப்ஜி, பிரீபயர் பாக்ஸ் அதிக சிறுவர்களிடமும், மாணவர்களிடமும் இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. சில ஆன்லைன் கேம்களுக்கு அரசு தடையுத்தரவு போட்டிருந்தாலும் சிலர் இன்னும் அதை எப்படியாவது விளையாடிட வேண்டுமென நினைக்கிறார்கள். ஆன்லைன் கேம் விளையாட்டு எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சிறுவர்களுக்கும் குழந்தைகளும் புரிவதில்லை. இன்று, உயர் நீதிமன்றன் மதுரைக்கிளை பிரீபயர் விளையாட்டு வன்முறையைத் தூண்டும் விதமாக உள்ளது என கருத்து தெரிவித்துள்ளது. இதுபற்றி நீதிபதிகள், “பெற்றோர்கள், குழந்தைகள் என அனைவரும் ஒருவருக்கொருவர் இந்த கேம் விளையாட்டினால் பேசிக் கொள்வதில்லை. பிரீபயர் விளையாட்டில் உள்ள ரத்தம் தெறிப்பது போன்ற காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையைத் தூண்டும் விதமாக உள்ளது” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.