ஜிஎஸ்டி ஆணையம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக தகவல் வெளியானதால் நிலையில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் புகழை களங்கப்படுத்துவதற்காகவே மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள நிலையில் இதுகுறித்து ஜிஎஸ்டி ஆணையர் விளக்கமளித்துள்ளார். ஜிஎஸ்டி வரிஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதென்றும் அதனால்தான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ரூ.6.79 கோடி வரி மற்றும் 6.79 கோடி அபராதம் செலுத்த கூறிய நோட்டீஸ் எதிர்த்த ஏ.ஆர்.ரஹ்மானின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது தமிழ் திரையுலத்தினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.