உலகநாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த “விக்ரம்“ திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது கமல்ஹாசன் மற்றும் உதயநிதி மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உதயநிதி ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இப்படம் ராஜ்கமல் பிலிம்ஸின் 54வது தயாரிப்பாகும். படத்தின் கதை மிசாவில் தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைதானதை ஒட்டி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஸ்டாலின் வேடத்தில் உதயநிதி நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்திரைப்படத்தை இயக்குனர் பிரசாந்த் முருகேசன் இயக்கப் போவதாக கூறப்படுகிறது.