தீபாவளிக்கு ரிலீசாகியுள்ள சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் “பிரின்ஸ்” திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்றுள்ளது.
நேற்று முன் தினம் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பிரின்ஸ்’ திரைப்படம் வெளியானது. ரிலீசுக்கு முன்னதாக திடீரென இந்த திரைப்படத்தில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் இருபத்தி மூன்று நிமிடங்கள் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் நீளம் திடீரென 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த மாற்றமே படம் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் குறைத்தது. இந்நிலையில் படம் வெளியாகி பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. ஆனாலும் முதல்நாளில் இந்த படம் சுமார் 7 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. சனி, ஞாயிறு மற்றும் தீபாவளி நாளான திங்கள் கிழமை படத்தின் வசூல் இன்னும் அதிகமாகுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் விடுமுறை நாட்களில் கூட இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த படத்தை வாங்கிய அன்புச்செழியனுக்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.