பள்ளி கடந்த சில மாதங்களாக கள்ளக்குறிச்சியிலுள்ள கனியாமூரில் தனியார் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது அப்பள்ளியை திறக்க சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
12ம் வகுப்பு மாணவி கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தற்கொலை செய்து கொண்டதையடுத்து பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அப்பள்ளி சில மாதங்களாக மூடப்பட்டு உள்ளது. மாணவி உயிரிழப்பை தொடர்ந்து அந்த தனியார் பள்ளி பொதுமக்களால் சூறையாடப்பட்டது. கடந்த சில மாதங்களாக அப்பள்ளியின் பராமத்து பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க பள்ளி நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த சில மாதங்களாக ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடந்து வந்த நிலையில் தற்போது அந்த பள்ளி திறக்கப்படவுள்ளது.