2026 சட்டமன்ற தேர்தலின்போது பாமக தலைமையில் கூட்டணி அமைப்போம் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்த பாமக வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. திமுகவுடன் பாமக நெருங்கி வருவதாக கூறப்படும் நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2026ம் ஆண்டு பாமக தலைமையில் புதிய கூட்டணி அமைப்போம் என்றும் அதற்கான வழிமுறைகளை 2024ம் ஆண்டு தேர்தலில் செயல்படுத்துவோம் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேறும் என்று கூறப்படுகிறது.