இன்று முதல் தமிழக அரசின் போக்குவரத்து துறை பேருந்துகளில் பயணம் செய்யும் போது அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களில் பெயர்களை ஒலிபரப்பும் திட்டத்தை அமல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.
சென்னை மாநகர பேருந்துகளில் முதல்கட்டமாக இத்திட்டத்தை அமல்படுத்த உள்ளதாகவும் சென்னை மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் அடுத்த பேருந்து நிறுத்தங்களில் பெயரை ஒலிபெருக்கி மூலம் இனி கேட்கலாம் என்றும் இத்திட்டம் இன்று அதாவது நவம்பர் 26 முதல் தொடங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. பேருந்து நிறுத்தங்கள் அடைவதற்கு 300 மீட்டர் தூரத்திலேயே பேருந்து நிறுத்தத்தின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிபரப்பப்படும் என்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் முதல் முறையாக சென்னை பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் மிகவும் பயனடைவார்கள்.