அன்பழகன் சிலை அமைக்க தடை; வழக்கில் திடீர் திருப்பம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

முன்னாள் அமைச்சர் அன்பழகன் சென்னை டிபிஐ வளாகத்தில் சிலையமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது இவ்வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் கல்வி அமைச்சர் அன்பழகனுக்கு சென்னை டிபிஐ வளாகத்தில் சிலை வைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அன்பழகன் சிலை அமைக்க தடை கோரி கோவையைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர இருந்தது. திடீரென மனுதாரர் பழனிச்சாமி தனது வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். டிபிஐ வளாகத்தில் அன்பழகனுக்கு சிலையமைக்க தடை கோரிய வழக்கு வாபஸ் பெற்றதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.