உலகநாயகன் கமலஹாசன் மெரீனாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக அனுமதி வேண்டி விண்ணப்பம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது, “சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்பது எனது நீண்டநாள் விருப்பம். சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதன் நினைவாக மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்று அனுமதி கோரி உள்ளோம், விரைவில் எங்களுக்கு அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் டில்லியில் ராகுல்காந்தியின் ஒற்றுமை பயணத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டதையடுத்து அவர் விரைவில் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பாளர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.