நடிகை குஷ்புவின் கருத்து!

Filed under: அரசியல்,தமிழகம் |

நடிகை குஷ்பு அரசு செய்யும் தவறை தட்டி கேட்கும் கவர்னர் நமக்கு கிடைத்திருக்கின்றார் என்று கூறியுள்ளார்.

நடிகை குஷ்பு கன்னியாகுமாரியில் விவேகானந்தரின் 160வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது “ஒரு அரசாங்கம் தவறு செய்யும் போது தட்டிக் கேட்கவும் அரசாங்கத்தின் செயல்களை மேற்பார்வை செய்யவும் தான் கவர்னர் இருக்கிறார். அவ்வகையில் அரசின் தவறுகளை தட்டிக் கேட்பவராக நம்முடைய கவர்னர் இருக்கிறார். சட்டசபையிலிருந்து கவர்னர் வெளியே போகும்போது அமைச்சர் பொன்முடி அவரை வெளியே போ என சைகை காட்டினார். அது மிகப்பெரிய தவறு, இதற்கு முன்பு பெண்கள் பஸ்ஸில் ஓசியில் செல்வதாக பொன்முடி கூறியதையும் முதலமைச்சர் கண்டிக்கவில்லை, தற்போதும் அதே நிலை தான் தொடர்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.