கடந்த சில ஆண்டுகளாக நடிகர் வினய்யும் விமலா ராமனும் காதலித்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன.
நடிகர் வினய் “உன்னாலே உன்னாலே” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதற்கடுத்து பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் ரூட்டை மாற்றிக்கொண்டு வில்லன் வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். “துப்பறிவாளன்,” “டாக்டர்” மற்றும் “எதற்கும் துணிந்தவன்” ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து கலக்கி வருகிறார். தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த நடிகை விமலா ராமனுடன் காதலில் இருப்பதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் வெளியாகின. இப்போது விமலா ராமன் தற்போது தனது காதலர் வினய் மற்றும் பெற்றோருடன் தனது 42வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் பரவ ரசிகர்கள் எப்போது திருமணம் என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.