சென்னை கல்லூரி மாணவர்கள் பாலியல் அத்துமீறலில் கல்லூரி முதல்வருக்கு எதிராக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டள்ளது.

கல்லூரி முதல்வர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் கல்லூரி கட்டணத் தொகையை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நந்தனம் ஒ.எம்.சி.ஏ கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளதாகவும் இதனால் நந்தனம் கல்லூரியின் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையில் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Related posts:
நீங்கள் இனி இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது; பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு நயன்தாரா ஆழ்ந்த இரங்கல்!
அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு !
மீண்டும் அம்மா ஸ்கூட்டர் அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட ஆணையர் பெறுவது எப்படி?
ஈ.சி.ஆர் - ஓ.எம்.ஆரில் 180 கோடியில் மேம்பாலம்!



