இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொரோனாவால் இறந்ததாக அறிவிக்கப்பட்டவர் தற்போது மீண்டும் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் பகுதியில் கொரோனா தொற்றால் கமலேஷ் 2021ம் ஆண்டு கமலேஷ் இறந்து விட்டதாக கூறி கொரோனா பாதுகாப்பு விதிகளை காரணம் காட்டி அவரது உடலை உறவினர்களிடம் மருத்துவர்கள் ஒப்படைக்கவில்லை. மேலும் மருத்துவமனை ஊழியர்களை அவரது உடலை இறுதி சடங்கு செய்து விட்டதாக கூறப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் தற்போது கமலேஷ் உயிருடன் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கு ஒரு கும்பல் போதை மருந்து செலுத்தி வந்தது என்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு பின் உயிருடன் வந்த கமலேஷிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவரை போதை பழக்கத்துக்கு அடிமையாக்கியது யார் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.