கர்ப்பமாக இருந்த கர்ப்பிணி ஒருவர் 13 நபர்களை சயனைடு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 32 வயது கர்ப்பிணி பெண் சராரத். இவர் கடந்த சில மாதங்களாக படிப்படியாக தனது உயிர் தோழி, காதலர் உள்ளிட்ட 13 பேர்களை சயனைடு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளதாகவும் கடந்த 2020ம் ஆண்டிலிருந்து இந்த கொலைகள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் கொலை செய்த நபர் ஒருவரின் நண்பர் இவரின் மீது சந்தேகமடைந்து கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது சராரத் மீது வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். கொலைகளுக்கான காரணம் பணம் என்று போலீசார் கூறினாலும் இது குறித்து விசாரணை முடிவில் தான் தெரிய வரும் என்று கூறப்படுகிறது. நான்கு மாத கர்ப்பிணி சராரத் மனநிலை பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் முதல் கட்ட விசாரணைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.