நாங்கள் யாருக்கும் அடிமையல்ல- எடப்பாடி பழனிசாமி

Filed under: அரசியல்,தமிழகம் |

நேற்று காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கருத்து தெரிவித்திருந்தார். அதில் பாஜகவுக்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தார். மேலும், அதிமுக பாஜகவின் அடிமை என்றும் கூறியிருந்தார்.

இன்று அதிமுக பொதுச் செயலாளரும், முன்னால் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று முதலமைச்சர் வெளியிட்ட கருத்திற்கு பதிலுரை வெளியிட்டுள்ளார். அதில், “செந்தில் பாலாஜிக்கு பரிந்து பேசுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பதட்டத்தோடு பேசுகிறார். இப்பதட்டத்திற்கு என்ன காரணம்? அதிமுகவை முதலமைச்சர் சீண்டிப் பார்க்க கூடாது. இந்த ஊழலுக்கு கூட்டணிக் கட்சிகள் துணைபோக வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். அதிமுக பாஜகவின் அடிமை என்று முதலமைச்சர் கூறுகிறார். இவர்கள் 1999ம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் திமுகவினர் இடம்பெற்றார்களா இல்லையா? அதிமுகவினர் எந்தக் கட்சிக்கும் அடிமையானவர்கள் அல்ல. சொந்தக் காலில் நின்று மக்களுக்காகப் பாடுபடுபவர்கள். அதிமுகவை எக்காலத்திலும் உங்களால் ஒன்றும் பண்ண முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.