தமிழக இடைக்கால பட்ஜெட்டுக்கு ரூ.60,610 கோடி ஒதுக்கீடு
*
தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் தாக்கல் செய்தார். மாநில பேரிடர் நிவாரண நிதியத்துக்கு ரூ.713 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாகக் கூறினார்.
தமிழக இடைக்கால பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:
இடைக்கால பட்ஜெட்டுகாக ரூ.60,610 கோடி நிதி ஒதுக்கீடு.
* காவல்துறைக்கு ரூ.6099 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
* தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.32.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
* மாநில பேரிடர் நிதியத்துக்கு ரூ.713 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
* தீயணைப்பு துறைக்கு ரூ.227 கோடி நிதி ஒதுக்கீடு.
* சிறைச்சாலை துறைக்கு ரூ.281 கோடி நிதி ஒதுக்கீடு.
* வேளாண்துறைக்கு ரூ.6938.57 கோடி நிதி ஒதுக்கீடு.
* நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.8,486.26 கோடி ஒதுக்கீடு.
* மின்சாரதுறைக்கு ரூ.13,819.03 கோடி நிதி ஒதுக்கீடு.
* போக்குவரத்துத் துறைக்கு ரூ.1590 கோடி நிதி ஒதுக்கீடு.
* குறு, சிறு, நடுத்தர தொழில்துறைக்கு ரூ.348 கோடி நிதி ஒதுக்கீடு.
* அனைவருக்கும் கல்வி திட்டத்துக்காக ரூ.2329.15 கோடி நிதி ஒதுக்கீடு.
* சுகாதாரத்துறைக்கு ரூ.9350.66 கோடி நிதி ஒதுக்கீடு.
* விளையாட்டுத் துறைக்கு ரூ.142.88 கோடி நிதி ஒதுக்கீடு.
* ஆதிதிராவிடர் நலனுக்கு ரூ.2702 கோடி நிதி ஒதுக்கீடு
* உணவு மானியத்துக்கு ரூ.5500 கோடி நிதி ஒதுக்கீடு.
* அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் நலனுக்காக ரூ.19,841 கோடி
* மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு ரூ.391.93 கோடி நிதி ஒதுக்கீடு
* சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு ரூ.677.93 கோடி நிதி ஒதுக்கீடு.
* சாலை திட்டங்களுக்கு ரூ.2013 கோடி நிதி ஒதுக்கீடு
* தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.152 கோடி நிதி ஒதுக்கீடு.
* பள்ளி கல்வித்துறைக்கு ரூ.24,820 கோடி நிதி ஒதுக்கீடு. கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.86,193 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்துக்கு ரூ.688 கோடி நிதி ஒதுக்கீடு.
* உயர்கல்வித்துறைக்கு ரூ.3,821 கோடி நிதி ஒதுக்கீடு.
* சுற்றுலாத்துறை ரூ.84.66 கோடி நிதி ஒதுக்கீடு.
* மீனவர் நலனுக்காக ரூ.742 கோடி நிதி ஒதுக்கீடு.
வெள்ள மீட்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட மீனவர்களுக்கு பாராட்டு |
அவிநாசி – அத்திக்கடவு திட்டம் அறிவிப்பு:
அவிநாசி – அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு திருத்திய கருத்து அனுப்பப்படும். திட்டத்துக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என பன்னீர்செல்வம் அறிவித்தார்.
மேகேதாட்டு அணை கட்டும் திட்டம் தடுப்பு:
மேகேதாட்டுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி தமிழக அரசால் தடுக்கப்பட்டது.
வருவாய், பற்றாக்குறை, இழப்பு மதிப்பீடுகளும், கணிப்புகளும்:
* மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு ரூ.23,688.11 கோடி என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* விற்பனை வரியால் கிடைக்கும் வருவாய் குறைந்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் மீதான விற்பனை வரி குறைந்துள்ளது. இதனால், தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.4,000 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
* அரசின் நிதிப்பற்றாக்குறை அடுத்த நிதியாண்டில் ரூ.9000 கோடியாக இருக்கும் என கணிப்பு.
* 2016-17ல் மாநில சொந்த வரி வருவாய் ரூ.96,531.41 கோடியாக உயரும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
* 2016- 17ல் முத்திரைத் தாள், பதிவுக்கட்டணமாக ரூ.10,548 கோடி ரூபாய் கிடைக்கும்.
* ஆயத்தீர்வை மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.7,101.81 கோடியை எட்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.
* வாகனங்கள் மீதான வரி வருவாய் ரூ.4,925.05 கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
* 2016 – 17 ஆண்டில் தமிழக அரசின் கடன் 2,47,031 கோடியாக இருக்கும்.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 20-ம் தேதி தொடங்கியது. பேரவையில் ஆளுநர் கே.ரோசய்யா உரையாற்றினார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாட்கள் விவாதம் நடந்தது. விவாதங்களுக்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா 22-ம் தேதி உரையாற்றினார். அத்துடன் தேதி குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கமாக, ஆளுநர் உரையைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும். ஆனால், பொதுத் தேர்தல் நடக்கவுள்ளதால் இப்போது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரையிலான அரசின் செலவுகளுக்கு நிதி ஒதுக்கும் வகையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்து அமையும் புதிய அரசு, முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.