கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி டில்லி சென்றார். அவர் டெல்லி பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி பயணத்தின் போது அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை சந்தித்து செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி நீக்கம் குறித்து ஆலோசனை செய்ததாகவும் கூறப்பட்டது. டில்லி பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பி உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.