டுவிட்டர் லோகோவை மாற்றிய எலான் மஸ்க்!

Filed under: உலகம் |

எலான் மஸ்க் உலகப் பெரும் கோடீஸ்வரர் பட்டியலிலில் முதலிடத்தில் உள்ளவர். இவர், டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓவாகவும், டுவிட்டர் நிறுவத்தின் அதிபராகவும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கிறார்.

பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளமான டுவிட்டரை சமீபத்தில், பல கோடிகள் கொடுத்து வாங்கினார் எலான் மஸ்க். இதையடுத்து, பல ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். இதையடுத்து, அதிகாரப்பூர்வ புளூ டிக் வெரிபிகேசனை புளூ, கிரே, கோல்டன் என மூன்று டிக்குகளாக பிரித்து பணம் வசூலித்து வருகிறார். சமீபத்தில் டுவிட்டர் பயனாளர்கள் எத்தனை டுவீட்டை பார்க்க முடியும் என்பதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளார். டுவிட்டரின் லோகோவை மாற்ற உள்ளதாகவும், பறவைகளுக்கு விடுதலை அளிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இன்று டுவிட்டர் அதிபர் எலான் மஸ்க் தனது டுவிட்டர் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை எக்ஸ் (Twitter X) என்று மாற்றியுள்ளார். இதனை பலரும் விமர்சித்து வருகின்றனர்.