அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதை அடுத்து, இதற்காக ஆளுங்கட்சியாக திமுக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் பங்கேற்றுள்ளது.
இந்த நிலையில், திமுக சார்பில் அனைத்து வாக்குச்சாவடிக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் மாவட்டங்களை மண்டலங்க்ளாக பிரிந்து வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பயிற்சி பாசறை கூட்டம் நடத்த திமுக திட்டமிட்டது. அதன்படி, டெல்டா மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட வாக்குச்சாவடி தேர்தல் பொறுப்பாளர்கள் ககூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்று வருகிறது. திமுக பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்கும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வாரிசு கட்சி என கேட்டு கேட்டு புளித்துப் போன விமர்சனத்தை முன்வைக்கிறார்கள் ஆம், நாங்கள் வாரிசு அரசியல்தான் செய்கிறோம். பெரியார், அண்ணா, கருணாநிதியின் வாரிசுகள் தான் நாங்கள். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யார் ஆட்சிக்கு வருகிறார்கள் என்பதைக் காட்டிலும் யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம். இந்தியாவின் கட்டமைப்பை பாஜக சிதைத்துவிட்டது. இதற்கு வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ என்று கூறினார்.