“ஜாக்சன் துரை” திரைப்படத்தின் 2வது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படம் சத்யராஜின் 250வது படம்.
தரணிதரன் “பர்மா,” “ஜாக்சன் துரை” மற்றும் “ராஜா ரங்குஸ்கி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். இவரது இயக்கத்தில் உருவான “ஜாக்சன் துரை” படத்தில் சிபிராஜ் மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். சத்யராஜ் இப்படத்தில் பேய் வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் சிபிராஜ் மற்றும் சத்யராஜ் மீண்டும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படம் சத்யராஜின் 250வது படமாக உருவாகி வருகிறது. இப்போது படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிப்பதை நிறுத்திய சத்யராஜ், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். அவர் நடித்த “பாகுபலி” படம் அவரை இந்தியா முழுவதும் பிரபலமடைய செய்தது.