வரும் 20ம் தேதி திமுக இளைஞரணி தரப்பிலிருந்து தமிழகம் முழுதும் நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது. மதுரையில் மட்டும் இப்போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு காரணமாக சமீபத்தில் மாணவன் மற்றும் அவருடைய தந்தை இறந்ததையடுத்து நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்தப் போவதாக திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவர் அணி அறிவித்தது. அதே 20ம் தேதி அதிமுக மாநாடு மதுரையில் நடைபெற உள்ளதால் அதிமுக இதற்கு கண்டனம் தெரிவித்தது. பிரதான எதிர்க்கட்சி மாநாடு நடத்துவதால் ஜனநாயகத்தை கருத்தில் கொண்டு நீட் எதிர்ப்பு போராட்டம் மதுரையில் மட்டும் 23ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என திமுக இளைஞரணி மாணவர் அணி மருத்துவர் அணி அறிவித்துள்ளது.