ஏற்கனவே I.N.D.I.A. கூட்டணியின் இரண்டு கூட்டங்கள் முடிவடைந்துள்ளது. மும்பையில் இன்று மூன்றாவது கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுள்ளார்.
மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவை வரும் பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிப்பதற்காக இந்தியாவில் உள்ள முக்கிய கட்சிகள் இணைந்துI.N.D.I.A. என்ற கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இன்றும் நாளையும் மூன்றாவது கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டார். இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு, கூட்டணிக்கான லோகோ உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன. பாட்னா, பெங்களூரை அடுத்து இந்த கூட்டமும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.