“ராக்கி” மற்றும் “சாணி காகிதம்“ ஆகிய திரைப்படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அடுத்து தனது மூன்றாவது படமான “கேப்டன் மில்லர்” படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்த தனுஷ் அடுத்து தன்னுடைய 50வது படத்தில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இப்போது படத்தின் நாயகியான பிரியங்கா மோகன் தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துள்ளார். இதை படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார். அதில் கமெண்ட் செய்த பிரியங்கா மோகன் “மிகப்பெரிய படத்தில் என்னையும் ஒரு பங்காக ஆக்கியதற்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.