நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் “ஜப்பான்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தினர். இத்திரைப்படம் கார்த்தியின் 25வது படம். இதில் கார்த்தியை வைத்து ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இயக்குனர் அமீர் கார்த்தியின் முதல் திரைப்படத்தை இயக்கியவர். ஆனால் இவ்விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து ரசிகர்கள் சமூகதளத்தில் இயக்குனர் அமீரை ஏன் அழைக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர். “பருத்திவீரன்” ரிலீஸின் போதே இயக்குனர் அமீருக்கும் கார்த்தி தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அது இதுவரை சமாதானமாகவில்லை. ஆனால் இந்நிகழ்ச்சியில் கார்த்தி பேசும்போது “நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாத எனக்குள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குனர் அமீர் அண்ணாதான்” எனக் கூறியுள்ளார்.