300 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெரும் விபத்து நிகழந்துள்ளது. பேருந்தில் பயணம் செய்த 33 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிஷத்வார் பகுதியிலிருந்து ஜம்முவிற்கு சென்று கொண்டிருந்த பேருந்து தோடா பகுதியில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 33 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒரு சிலர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இடுப்பாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கி இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.