அஸர்பைஜானில் தற்போது அஜீத்தின் 62வது படமான “விடாமுயற்சி” ஷூட்டிங் நடந்து வருகிறது. அஜீத், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளனர். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
அஜர்பைஜானில் சமீபத்தில் இந்த படத்தின் ஒரு விறுவிறுப்பான கார் சேஸிங் சண்டைக்காட்சி ஒன்றை ஹாலிவுட் கலைஞர்கள் உதவியோடு படமாக்கி உள்ளார் இயக்குனர் மகிழ் திருமேனி. ஜனவரி இறுதிவரை அஜர்பைஜானில் நடக்க இருந்த விடாமுயற்சி ஷூட்டிங்கை திடீரென நிறுத்திவிட்டு இப்போது சென்னை வந்த படக்குழு இப்போது மீண்டும் அஜர்பைஜானுக்கு கிளம்பியுள்ளது. படம் ஒரு ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்ற தகவல் பரவி வருகிறது. இளம் காதலர்கள் சந்திக்கும் பிரச்சனையைப் பற்றிய ஒரு கதைதான் சில மாற்றங்களோடு மகிழ் திருமேனி விடாமுயற்சி கதையாக உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. தன்னுடைய மனைவியான திரிஷாவை ஒரு கூட்டம் கடத்திவிட அவரை தேடி செல்லும் அஜீத் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதே கதை என்று கூறப்படுகிறது.