நடிகை திரிஷா பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

நடிகை திரிஷா சமீபத்தில் வெளியான “பொன்னியின் செல்வன் 1,” “பொன்னியின் செல்வன் 2,” “லியோ” ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றன. நடிகர் அஜீத்தின் “விடாமுயற்சி” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இப்பட ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்து வருகிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் படத்தில் திரிஷா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இப்படத்தை விஷ்ணு வர்தன் இயக்கவுள்ளார். இப்படத்தை கரண்ஜோகர் தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்கப்பட்டு, இவ்வாண்டின் இறுதிக்குள் இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2010ம் ஆண்டு “கட்டா மீட்டா” என்ற படத்தில் திரிஷா நடித்திருந்தார். தற்போது 13 ஆண்டுகள் கழித்து திரிஷா இந்தி சினிமாவில் நடிக்கவுள்ளார்.



