அஸர்பைஜானில் அஜீத்தின் 62வது படமான “விடாமுயற்சி” திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இத்திரைப்படத்தில், அஜீத்துடன் திரிஷா, அர்ஜூன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் கடந்த மாதம்தான் தொடங்கி நடந்து வந்தது. ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும், 2வது கட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்படத்தை அடுத்து, அஜீத், “மார்க் ஆண்டனி” ஹிட் படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், இப்படத்திற்கு அஜீத் ரூ163 கோடியை சம்பளமாகப் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது. புத்தாண்டு நிகழ்ச்சியில், அஜீத் கலந்துகொண்டு டான்ஸ் ஆடி கொண்டாடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.