ஹெச். வினோத் இயக்கத்தில் கமல் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக இருந்தது. அந்த படம் கிட்டத்தட்ட டிராப் என்று அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் அந்நிறுவனம் தயாரிக்கவிருக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அப்பட்டியலில் “தக்லைப்,” அன்பறிவி இயக்கும் “கமல் 237” திரைப்படம் மற்றும் சிம்பு, சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்களை குறிப்பிட்டுள்ளது. இப்பட்டியலில் ஹெச். வினோத்தின் திரைப்படம் குறித்த அறிவிப்பு இல்லை. இதனால் கமல்ஹாசனின் அடுத்த படத்தை ஹெச். வினோத் இயக்கபோவது இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. எனவே அத்திரைப்படம் டிராப் எனவே கருதப்படுகிறது. கமல்ஹாசன் படத்தை இயக்குவதற்காக கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் காத்திருந்த ஹெச். வினோத் அடுத்த கட்டமாக யோகி பாபு நடிக்கவிருக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் அதையடுத்து அவர் தனுஷ் மற்றும் கார்த்தி நடிக்கவிருக்கும் படங்களை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.