சிலியை ஆட்டிப்படைக்கும் காட்டுத் தீ! 158 இடங்களில் 7,000 ஹெக்டேர் பாதிப்பு, 46 உயிர்கள் பலி.
அமேரிக்காவில் உள்ள சிலி, மத்திய சிலி பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனால் அங்குள்ள ஆயிரம் வீடுகள் முற்றிலும் தீயின் பிடியில் சிக்கி எரிந்தன. இந்த சம்பவத்தில் முதற்கட்டமாக 46 பேர் பலியாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. காட்டுத்தீ குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தீ பரவாமல் தடுக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். விமானங்களின் உதவியுடன் நீர் எடுத்து வரப்பட்டு, ஆகாயத்தில் வழியாக நீர் தெளிக்கப்பட்டும் தீ பரவலை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தீ விபத்துக்கான காரணம் என்பது தற்போது வரை தெரியவராத நிலையில், மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மேலும், தீ பரவ வாய்ப்புள்ள இடங்களில் இருக்கும் மக்கள், பாதுகாப்பான முகாம்களுக்கு அவசரக் கதியில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
திடீரென ஏற்பட்ட இந்த பெரும் காட்டுத்தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் சரியான தகவல் கிடைக்கவில்லை. மீட்புப் பணிகளுக்கு மத்தியில் இது தொடர்பான விசாரணையும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றின் வேகம் காரணமாக மரக்கிளைகளுக்கு இடையிலான உராய்வுகளே இந்த காட்டுத் தீ ஏற்படுவதற்கான காரணம் என்று கூறப்படுகிறது
தீ பரவும் வாய்ப்பு இருக்கும் இடங்களில் பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக 158 இடங்களில் ஏற்பட்ட இந்த காட்டுத்தீ காரணமாக 7 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான வனப் பகுதிகள் எரிந்து நாசமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் முதலில் 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இந்த பலி எண்ணிக்கை 46 ஆக உயர்ந்து உள்ளது.
சிலி நாட்டின் கடற்கரை நகரங்களில் இந்த காட்டு தீயின் காரணமாக சாம்பல் புகை சூழ்ந்து உள்ளது. இந்த புகை அடர்ந்த மூடுபனி போல காணப்படுகிறது. குறிப்பாக மத்திய பகுதியான வினா டெல் மார் மற்றும் வால்பரைசோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.